×

பட்டாசு ஆலைகளில் 3ம் நாளாக சிபிஐ அதிகாரிகள் தொடர் ஆய்வு

சிவகாசி, மே 21: சிவகாசியில் சிபிஐ அதிகாரிகள் பட்டாசு ஆலையில் மூன்றாம் நாளாக நேற்றும் ஆய்வு நடத்தினர். சிவகாசி சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் 1200 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் சரவெடி மற்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை மீறி பட்டாசு தயாரிப்பதை ஆய்வு செய்து அறிக்கை வழங்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில் டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரி அஜின்ராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் சிவகாசி பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளான நேற்று சல்வார்பட்டி, பெத்துலுபட்டி, சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின் போது தடை செய்யப்பட்ட சரவெடி தயாரிக்கும் பணி நடக்கிறதா எனவும், கெமிக்கல் அறையில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்துகின்றனரா எனவும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பட்டாசு மற்றும் கெமிக்கல் மாதிரிகளை எடுத்து சென்றனர். சிபிஐ அதிகாரிகள் சிவகாசி பட்டாசு அலையில் தொடர் சோதனை நடத்தி வரும் தகவல் அறிந்த உரிமையாளர்கள் பலர் ஆலைக்கு விடுமுறை அறிவித்தனர்.

Tags : CBI ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...