துணை ஜனாதிபதி வழியனுப்பு: குமரகுரு கல்வி நிறுவனங்களின் யுகம் 2வது நாள் நிகழ்வுகள்

கோவை, மே.21: கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களின் ‘யுகம்’ 2வது நாள்  நிகழ்வு தொடங்கியது. குமரகுரு கல்வி நிறுவனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத போட்டிகள் மாணவர்களின் போட்டி மற்றும் புதுமையான எண்ணங்களை  தூண்டின. அதன்படி நேற்று அங்காடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சேலம் மோட்டார் சைக்கிள் கிளப் தங்களின் மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் திறன்களை வெளிப்படுத்தினர்.

இரு சக்கர வாகனங்களில்  அட்டகாசமான சாகசங்களை நிகழ்த்தினர். வாட்டர் ராக்கெட்டிரி போட்டி சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. ஐசா விருதுகள் ‘மனம்’ படத்துக்கும், சிறப்பு விருது ‘நான் யார்’ படத்திற்கும் வழங்கப்பட்டது. திட்டம் 2 படத்தின் இயக்குனர்  விக்னேஷ் கார்த்திக் மற்றும் ஒளிப்பதிவாளர் சதானந்த் ரங்கராஜ் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

Related Stories: