தமிழக முதல்வரிடம் மாநகராட்சி கவுன்சிலர் மனு

கோவை,  மே 21: கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், கோவை மாநகராட்சி  72-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் அளித்துள்ள மனு: கோவை  மாநகர் ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கலையரங்கம் உள்ளது.  இக்கலையரங்கத்திற்கு மறைந்த இயல், இசை மேதையும், நடிப்பிசை புலவருமான எம்.கே.தியாகராஜ பாகவதர் பெயரை வைக்கவேண்டும் என விஸ்வகர்மா சமுதாய மக்கள்  சார்பில் வேண்டுகிறோம். இந்த பகுதியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  விஸ்வகர்மா சமுதாய மக்கள், தங்கநகை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.  எனவே, தாங்கள் அவருடைய பெயரை சூட்டும் பட்சத்தில், இச்சமுதாய மக்கள் பெரும்  மகிழ்வு அடைவார்கள். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: