ஓராண்டு ஆட்சி நூறாண்டு பேசும்: முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் அறிக்கை

கோவை, மே 21: கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடுமையான உழைப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, அரசியல் ராஜதந்திரம், மக்களை நேசிப்பது, உதவிசெய்தது என இவை எல்லாம்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என்ற நற்பெயரை பெற்றுத்தந்துள்ளது. அவரது தலைமையில் தமிழகத்தில், லஞ்சம் தவிர்க்கப்பட்டு, நேர்மையாக ஆட்சி நடைபெறுகிறது. கொரோனா நிவாரணமாக குடும்பத்திற்கு தலா ரூ.4 ஆயிரம், மகளிருக்கு இலவச பேருந்து, ஆவின் பால்விலை குறைப்பு, தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை,

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியது, கல்வித்துறையில் மறுமலர்ச்சி, தொழில்வளர்ச்சியில் முதலிடம், வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்க புதிய திட்டங்கள், விவசாய உற்பத்தியை பெருக்க வேளாண்மைக்கு தனி பட்ஜெட், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி என பல அதிரடி திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். முதல்வரின் ஓராண்டு சாதனை, நூறாண்டு பேசும். தமிழகத்தை, நம்பர் ஒன் மாநிலமாக உயர்த்த, தொடர்ந்து அயராது உழைத்து வரும் தமிழக முதல்வருக்கு நாம் அனைவரும் துணை நிற்போம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: