காஞ்சிக்கோயில் ஸ்ரீசீதேவி அம்மன் கோயில் தேர்த்திருவிழா

ஈரோடு,மே21:  ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயிலில் உள்ள ஸ்ரீசீதேவி அம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இக்கோயில் திருவிழா மே 4ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து கிராமசாந்தி, கொடியேற்றம், தீர்த்தம் எடுத்து வருதல், குண்டம் இறங்குதல், பொங்கல் வைக்கும் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் காஞ்சிக்கோயில் ஸ்ரீசீதேவி அம்மன் நல அறக்கட்டளைதாரர்கள்  தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து இன்று தேர் நிலை சேருதல்,  நாளை (22ம் தேதி) மஞ்சள் நீராட்டு மற்றும் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Related Stories: