×

பாப்பாபட்டியில் ரூ.1.33 கோடி மதிப்பு திட்ட பணிகள் துவக்கம்

உசிலம்பட்டி, மே 21: உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் கடந்த 2021 அக்.2ல் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை, குடிநீர் தொட்டி உள்ளிட்ட 12 திட்ட பணிகள் முடிக்கப்பட்டன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை கலெக்டர் விசாகன், எஸ்பி பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்தனர்.

தெடார்ந்து அமைச்சர்கள், முதல்வரிடம் பொதுமக்களால் வழங்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து ரூ.2.87 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், யூனியன் சேர்மன் ஜெயச்சந்திரன், ஊராட்சி தலைவர் முருகானந்தம், மாவட்ட திட்ட இயக்குனர் அபிதா ஹனிப், கோட்டாட்சியர் சங்கரலிங்கம், வட்டாட்சியர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Papapatti ,
× RELATED மதுரை உசிலம்பட்டி அருகே ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியல் உடைப்பு