×

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கல்லீரல் புற்றுநோய் பாதித்தவருக்கு ‘ரோபோ’ உதவியுடன் ஆபரேஷன்

மதுரை, மே 21: தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக 65 வயதான முதியவருக்கு ரோபோ உதவியுடன் கல்லீரல் அறுவை சிகிச்சையை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக செய்து, புற்றுநோய் கட்டியை அகற்றியது. கல்லீரல்- கணைய அறுவை சிகிச்சை துறை டாக்டர் னிவாசன் ராமசந்திரன், குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறை டாக்டர் மோகன், மயக்கவியல் துறை டாக்டர் மஹராஜன் குழுவினர், ரோபோ உதவியுடன் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் னிவாசன் ராமச்சந்திரன் கூறும்போது, ‘கல்லீரல் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையே தீர்வாகும். கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சைகளால் புற்றுநோயின் வளர்ச்சியை தாமதிக்கலாம்.

‘டா வின்சி சர்ஜிக்கல் ரோபோ’ உதவியுடன் 65 வயது முதியவருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அடிவயிற்றின் கீழ்ப்பகுதியில் சிறிய கீறல் வழியாக, ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யும் இடத்தின் 3டி காட்சி பன்மடங்கு பெரிதாக்கி பார்க்கப்பட்டது. துல்லியம், நெகிழ்வுத்திறன் மற்றும் கட்டுப்பாட்டுடன் அறுவை சிகிச்சை செய்ய இது உதவியது என்றார்.

குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி கூறும்போது, ‘அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்துதல், அதிக உடற்பருமன், நீரிழிவு, ஹெபடைடிஸ் பி அல்லது ஹெபடைடிஸ் சி வைரஸ் தொற்று சரிசெய்ய இயலாத அளவிற்கு கல்லீரலை சேதப்படுத்தும். இந்த கல்லீரல் புற்றுநோயின் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளும் வெளியில் தெரியாது. நோய் வளர்ச்சியடைந்து நோயாளியின் உடல் எடையும், பசியுணர்வு குறையும். வயிற்றின் மேற்புறத்தில் வலி, குமட்டல், வாந்தி, அடிவயிற்று வீக்கம், மஞ்சள் காமாலை போன்ற விளைவுகள் ஏற்படும்’ என்றார்.

Tags : Meenakshi ,Mission Hospital ,Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...