க்ரைம் நியூஸ்

விபத்தில் வாலிபர் பலி: கொடுங்கையூரை சேர்ந்த சந்தோஷ் (19), அம்பத்தூர் அருகே பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.

ஆசிட் குடித்த வாலிபர் சாவு:அமைந்தகரையை சேர்ந்த முகமது ஆரிப் (21), நேற்று முன்தினம் அவரது தாய் திட்டியதால், கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து மயங்கினார். அவரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி இறந்தார்.

கடைக்காரரை தாக்கிய 4 பேர் கைது: மயிலாப்பூர் நாச்சியப்பன் தெருவில் உள்ள மதன் (42) என்பவரின் எலக்ட்ரிக் கடை முன்பு பைக் நிறுத்திய தகராறில், மதனை டியூப் லைட்டால் தாக்கிவிட்டு தப்பிய விஷ்வா (21), பரத்குமார் (20), பாலா (19), அருண் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நகை, பணம் பறித்த 2 ேபர் கைது: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் முதல் பிளாக் பகுதியை சேர்ந்த ஜோதி என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து, கத்தி முனையில் 4 சவரன் செயின், வெள்ளி கொலுசு, ₹10 ஆயிரத்தை பறித்து சென்ற திருவள்ளூரை சேர்ந்த வெங்கடேஷ் (எ) சிவா (27), வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்த பிரசாந்த் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டியிடம் செயின் பறிப்பு: நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மடிப்பாக்கத்தை சேர்ந்த அம்பிகா (70) என்பவர் அணிந்திருந்த 3 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Related Stories: