×

அடுத்தடுத்து 2 வீடுகளை உடைத்து 30 சவரன் கொள்ளை

அம்பத்தூர், மே 21:  அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரை சேர்ந்த நாராயணன் (58), தனது மனைவியுடன் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் கோயிலுக்கு சென்றிருந்தார். நேற்று காலை வீடு திரும்பியபோது, கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 25 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ₹1.50 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

இதேபோல், அம்பத்தூர் சூரப்பட்டு துலுக்காணத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் (28) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 5 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், ₹10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Tags :
× RELATED பந்தலூர் அருகே பரபரப்பு நாயை மிதித்து...