×

ஆதிபராசக்தி தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்கள் 150 பேருக்கு பணி நியமன ஆணை

மதுராந்தகம், மே 21: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொழில்நுட்ப கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் 150 பேருக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார். கம்ப்யூட்டர் துறை தலைவர் ஜெ.செந்தில்குமார் வரவேற்றார். முதல்வர் தமிழ்வேந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் டிப்ளமோ இறுதியாண்டு மாணவர்கள் 150 பேர் குறைந்தபட்ச சம்பளம் ஆண்டுக்கு ரூ.1.8 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.3.6 லட்சம் வரை பெறுவதற்கு சுமார் 20 நிறுவனங்கள் மூலமாக இந்த வேலை வாய்ப்பினை மாணவர்கள் பெற்றனர். அதற்கான பணி நியமன ஆணையை, கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார், மாணவர்களுக்கு வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். விழாவில் கல்லூரி துறைத் தலைவர்கள் வெங்கட சுப்பிரமணியன், நித்யானந்தம், இளங்கோவன், பிரபு, இளவழகன், ஹரிகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் பட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Adiparasakthi Technical College ,
× RELATED ஆதிபராசக்தி தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்கள் 150 பேருக்கு பணி நியமன ஆணை