×

செய்யூர் சட்டமன்ற திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: திண்டுக்கல் லியோனி பங்கேற்பு

செய்யூர், மே 21: காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் திமுக  சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற, தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசினார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, தமிழக மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி சாதனை புரிந்துள்ளது. இதனை எடுத்துரைக்கும் விதமாக செய்யூர் வட்டம் சித்தாமூர் அருகே பொளம்பாக்கத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

சித்தாமூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ.சிற்றரசு, ஒன்றிய செயலாளர்கள் லத்தூர் வடக்கு கே.எஸ்.ராமச்சந்திரன், திருக்கழுகுன்றம் தெற்கு சரவணன், லத்தூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.எஸ்.பாபு, இடைக்கழிநாடு பேரூர் செயலாளர் இனியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்தாமூர் ஒன்றியக்குழு தலைவர் ஏழுமலை வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, திமுக பேச்சாளர் மதுரை சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ஐ.லியோனி பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று கடந்த ஓராண்டு காலத்தில் பொதுமக்களை கவரும் வகையில் பல எண்ணற்ற சாதனைகளை புரிந்துள்ளது.

ரூ.250 கோடி மதிப்புள்ள 2,500 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டு, அதனை மீண்டும் சாமிக்கே கொடுத்தது நமது திமுக ஆட்சி. பெண்கள் பயன்பெறும் வகையில், அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த ஆட்சியில் தான் இல்லம் தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது’ என்றார். இதில், எம்பி செல்வம், முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.தசரதன், வெளிக்காடு வே.ஏழுமலை, மாவட்ட குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Seyyur Assembly DMK ,Dindigul Leoni ,
× RELATED அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு...