சென்னை பல்கலை தரவரிசை பட்டியலில் வித்யாசாகர் மகளிர் கல்லூரி முதலிடம்: மாணவிகளுக்கு கவர்னர், முதல்வர் பாராட்டு

செங்கல்பட்டு, மே 21: சென்னை பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த வித்யாசாகர் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை பல்கலைக்கழகத்தின்  164வது ஆண்டு பட்டமளிப்பு விழா  கடந்த 16ம் தேதி  சென்னை, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. இதில்  சென்னை பல்கலைக்கழக கல்லூரிகள் அளவில், தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கலைக்கல்லூரி முதுகலை வணிகவியல் துறை மாணவி  சந்திரிகாதேவி, முதுகலை தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி   காஜல் ஆகியோருக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் பட்டங்கள் வழங்கி கவுரவித்தனர்.

இதில், உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்  உள்பட பலர் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக அளவிலான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த 2 மாணவிகளை, வித்யாசாகர் மகளிர் கல்வி குழும தாளாளர், நிர்வாகிகள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Related Stories: