ஸ்டீல் பட்டறையில் தீவிபத்து

தண்டையார்பேட்டை நேரு நகர் 5வது தெருவை சேர்ந்த தீனதயாளன் (42), அதே பகுதி 14வது தெருவில் ஸ்டீல் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், ஊழியர்களை பட்டறையை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில், நள்ளிரவில் அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தண்டையார்பேட்டை, கொடுங்கையூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.

இதேபோல், காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் விசைப் படகுகளின் இரும்பு உதிரிபாக கழிவுகள் கொட்டி வைத்திருந்த குப்பை மேட்டில் நேற்று முன்தினம் இரவு தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Related Stories: