பூ வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சம் கொள்ளை

ஆவடி: ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரலப்பாக்கம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் சாரங்கன்(48), கூலித்தொழிலாளி. இவரது மனைவி உஷா(40), பூ வியாபாரி. இந்நிலையில், நேற்று இவர்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு இருவரும் வேலைக்கு சென்றனர். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறை பீரோவும் உடைக்கப்பட்டு ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. புகாரின்பேரில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: