எலிக்கு வைத்த உணவை சாப்பிட்ட இளம்பெண் சாவு: செங்குன்றம் அருகே சோகம்

புழல்: செங்குன்றம் அருகே எலிக்கு வைத்த உணவை இளம்பெண் சாப்பிட்டதால் பரிதாபமாக பலியானார். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 10வது தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மகள் சில்வனாமேரி(23), தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு எலியை கொல்வதற்காக  சாப்பாட்டில் எலி மருந்து கலந்து வைத்துள்ளனர்.

அதை சில்வனாமேரி   தனக்குதான் சாப்பிடுவதற்காக வைத்துள்ளனர் என நினைத்து சாப்பிட்டுள்ளார்.  சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால், பயந்துபோய் சத்தம் போட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள்  சம்பவ இடத்திற்கு ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போதுதான் எலிக்கு வைததிருந்த உணவை எடுத்து சில்வனாமேரி சாப்பிட்டுள்ளது தெரியவந்தது.

உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக  அவர் பலியானார். தகவலறிந்த செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்மை காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: