மாதர்பாக்கம் ஊராட்சியில் ரூ.17.5 லட்சத்தில் பள்ளி கட்டிடத்துக்கு அடிக்கல்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி, மே 21: கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஏழை மாணவர்கள் மாதர்பாக்கத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில், பழுதான இப்பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டனர். இதனால் அப்பள்ளி மாணவர்கள் போதிய இடவசதியின்றி படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனிடம், அரசு நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என மாதர்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் வலியுறுத்தினார். இக்கோரிக்கையை ஏற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.5 லட்சத்தை பள்ளி கட்டுமான பணிக்கு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஒதுக்கினார்.

இந்நிலையில், மாதர்பாக்கத்தில் நேற்று முன்தினம் மாலை புதிய அரசு பள்ளி கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்று, பள்ளி கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

மேலும், இப்பள்ளி வளாகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் சத்துணவு கூடம், சுற்றுச்சுவர், கழிவறை உள்பட அனைத்து கட்டிடங்களும் கட்டி தரப்படும் என டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மணிபாலன், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், இலக்கிய அணி புரவலர் மாதர்பாக்கம் மனோகரன், ஒன்றிய துணை செயலாளர் இயேசுரத்தினம், ஒன்றிய கவுன்சிலர்கள் சிட்டிபாபு, கலா, கிளை செயலாளர் பிரபு, துணை தலைவர் ரஜியா, முன்னாள் தலைவர் பல்லவி, மீனவரணி அமைப்பாளர் ஆறுமுகம், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் சுகுமாரன், பேரூராட்சி துணை தலைவர் கேசவன், கவுன்சிலர் கரீம், ஊராட்சி செயலர் சுப்பிரமணி, இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், ஒன்றிய பிரதிநிதி ராகவரெட்டிமேடு ரமேஷ், நிர்வாகிகள் அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: