திருச்சி மாவட்டத்தில் 8.3 டன் விதைகள் விற்க தடை விதிப்பு

திருச்சி, மே 20: திருச்சி மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய கோவை, விதைச்சான்று இயக்குநர் சுப்பையா உத்தரவின்படி ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் ஜெயராமன் தலைமையில், விதை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் திருச்சி பகுதியில் 18 தனியார் மற்றும் 11 அரசு விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விதை உரிம விவரங்கள், விதை இருப்பு, கொள்முதல் செய்த விதைகளின் விலைப்பட்டியல், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து விதைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக அலுவலக விதை மாதிரிகள் சேகரித்து, விதை பரிசோதனை நிலையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வில் விதை சட்ட விதிகளை மீறியது தொடர்பாக ரூ.6,45,000 மதிப்புள்ள 8.3 டன்கள் விதை நெல் மற்றும் இதர விதைகள் விற்க தடை விதிக்கப்பட்டது. ஆய்வின்போது திருச்சி, மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு மற்றும் விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: