பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

திருச்சி, மே 20: பேரறிவாளன் விடுதலை செய்ததை எதிர்த்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், ரெக்ஸ் உட்பட காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டி கொண்டு பங்கேற்றனர். அதுபோல் திருச்சி ஜங்ஷன் ராஜீவ்காந்தி சிலை அருகே காங்கிரஸ் நிர்வாகி சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவெறும்பூர்: திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் நடந்த போராட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இதில் துவாக்குடி நகர தலைவர் தாமோதரன், மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: