திருவாரூர் மாவட்டத்தில் 16,312 தேர்வர்கள் நாளை குரூப்2 தேர்வு எழுதுகின்றனர்

திருவாரூர், மே 20: திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வினை 16 ஆயிரத்து 312 பேர்கள் எழுதவுள்ளதாக கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -2 தேர்வுகள் நாளை நடைபெறுவதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் தேர்வு குறித்த முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தில் குரூப் -2 தேர்வு திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 3 மையங்களுக்குட்பட்ட 40 இடங்களில் 56 தேர்வறைகளில் நாளை (21ம் தேதி) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது.

இத்தேர்வில் 16 ஆயிரத்து 312 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில், 56 முதன்மை கண்காணிப்பாளர்களும், 12 நடமாடும் கண்காணிப்புகுழுக்களும், 4 பறக்கும் படைகளும், 112 ஆய்வு அலுவலர்களும் 56 வீடியோ ஒளிப்பதிவாளர்களும் தேர்வுபணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் உரிய நேரத்தில் தேர்வுக்கு வருகை தந்து தேர்வினை நல்ல முறையில் எழுதி வெற்றிபெற்று வாழ்கையில் முன்னேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பிரிவு அலுவலர் ஜெயமுருகன், உதவி பிரிவு அலுவலர்கள் பகீம், பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: