சுவாமிமலை கோயில் இடங்களில் டிஜிட்டல் சர்வேயுடன் கல் புதைக்கும் பணி

பாபநாசம், மே 20: சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் டிஜிட்டல் சர்வே செய்து கல் புதைக்கும் பணி நடந்தது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து இடங்களையும் டிஜிட்டல் முறையில் சர்வே செய்து கல் புதைக்க வேண்டும் என அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் இடங்களை டிஜிட்டல் முறையில் சர்வே செய்து கல் புதைக்கும் பணி தொடங்கியது.

அதன்படி நேற்று சுவாமிமலை அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் டிஜிட்டல் முறையில் சர்வே செய்து ஹச். ஆர். என். சி. என்று பெயர் எழுதி கல் புதைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை கோயில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோயில் கண்காணிப்பாளர்கள், கோயில் பணியாளர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: