எம்எல்ஏ ஆய்வு அமைச்சர் பொன்முடி பேச்சு தஞ்சாவூர் அருகே அம்மன் கோயில் விழாவில் தகராறு இருதரப்பை சேர்ந்த 8 பேர் கைது

வல்லம், மே 20: தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வீதியுலாவின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 8 பேரை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவின் போது அம்மன் வீதியுலாவாக வந்தது. அப்போது இருதரப்பை சேர்ந்தவர்களுக்கு இடையில் பிரச்னை எழுந்தது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. மேலும் இருதரப்பையும் சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்கிக் கொண்டதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ஒரு தரப்பை சேர்ந்த அர்ஜூனன், மறுதரப்பை சேர்ந்த ஆகாஷ் ஆகிய இருவரும் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகாரளித்தனர். இதன் பேரில் வல்லம் டிஎஸ்பி., பிருந்தா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அர்ஜூனன் கொடுத்த புகாரின் பேரில் பிள்ளையார்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்த சுதாகர் மகன்கள் அபினாஷ்(22), ஆகாஷ்(20), சதாசிவம் மகன் சச்சின்(23), சந்திரராஜ் மகன் விக்கி (எ) விக்ரம் (22) ஆகிய நாலு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் எதிர்தரப்பை சேர்ந்த ஆகாஷ் கொடுத்த புகாரின் பேரில் பிள்ளையார்பட்டி, வடக்கு நாயக்கன் தெருவை சேர்ந்த தனபால் மகன் மணிகண்டன்(32), நாகராஜ் மகன் கோகுலகிருஷ்ணன்(22), கோவிந்தராஜ் மகன் மாரிமுத்து(28), தனபால் மகன் மகேஸ்வரன்(29) ஆகிய 4 பேர் என இருதரப்பையும் சேரந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் பிள்ளையார்பட்டி ஊராட்சித் தலைவர் உதயகுமார் தலைமையில் இருதரப்பையும் சேர்ந்தவர்கள் தமிழ்ப்பல்கலைக்கழக காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வழக்கு வேண்டாம். நாங்கள் சமாதானமாக செல்கிறோம் என்று தெரிவித்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் கைது செய்தவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: