கிருஷ்ணராயபுரம் அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்

கிருஷ்ணராயபுரம், மே 20: கிருஷ்ணராயபுரம் அருகே வளையர்பாளையத்தை சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் சுப்பிரமணி (35). தனது பைக்கில் மாயனூர் மின்சாரத்துறை அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சட்டீஸ்கர் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த கலியபெருமாள் மகன் சரவணன் (43) என்பவர் ஓட்டிச்சென்ற பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியை அருகிலிருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டிச் சென்ற சரவணன் கோவை சிப்காட் குறிஞ்சி ஹவுசிங் யூனிட்டில் வசிக்கின்றார். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: