எர்ணாகுளம், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டி வேண்டும்

குளித்தலை, மே 20: குளித்தலை வழியாக இயக்கப்படும் மைசூர், எர்ணாகுளம் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இயக்ககோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளித்தலை மக்கள் நலவாழ்வு சங்க தலைவர் கிராமியம் டாக்டர் நாராயணன், செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: சேலம் ரயில்வே கோட்டம் குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக மைசூர் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேற்படி ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். மேலும் முன்பதிவில்லா பெட்டிகள் இணைத்திட ஆணை வழங்க வேண்டும். ரயில்வே வருமானத்தினை உயர்த்திட இதனை செய்வதுடன் சேலம் முதல் மானாமதுரை, சேலம் முதல் திருச்செந்தூர் வரை புதிய ரயில் விட வேண்டும். சென்னையிலிருந்து விழுப்புரம், தஞ்சை வழியாக வரும் சோழன் விரைவு ரயிலை குளித்தலை வழியாக கரூர் ஜங்ஷன் வரை நீட்டித்து தர வேண்டும். இதனால் ரயில்வே வருமானம் அதிகரிக்கும், பொதுமக்களும் அதிகமாக பயன்பெறுவார்கள். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: