கலெக்டர் அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி

திருப்பூர்,மே20:திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு கால மேலாண்மை மற்றும் இயற்கை எதிர்ப்பு சக்தி என்ற தலைப்பில் 2 நாட்கள் பயிற்சி முகாம் நடத்த, தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தலின்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சேலம் மண்டல அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாமிற்கு துணை கலெக்டர் குமார் தலைமை தாங்கி பேசினார். இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு முனைவர் பிருந்தா பயிற்சி அளித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாளாக இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

Related Stories: