காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வினீத் தகவல்

திருப்பூர்,மே20: திருப்பூர் கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2022-ம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருது அகிம்சை மற்றும் பிறகாந்திய முறை மூலம் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான சிறப்பான பங்களிப்புக்காகவும், மனித துன்பங்களை குறிப்பாக சமூகத்தை குறைந்த சலுகை பெற பிரிவுகளின் பங்களிப்புக்காகவும், இந்த விருது தனிநபர்களுக்கும்,நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.மேலும், சமூகநிதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி தேசியம்,இனம், மதம், பாலினம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனைத்து நபர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

எனவே மேற்கண்ட விருதுக்கான தகுந்த ஆதாரங்களுடன் வருகிற 26ம் தேதி மாலை 5 மணிக்குள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகம் அறை எண் 35, தொலை பேசி எண் 0421-2971168 என்ற எண்ணில் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: