ஆசிரியரின் பைக்கில் பதுங்கி இருந்த பாம்பு

திருப்பூர்,மே20:திருப்பூர் அருகே உள்ள வஞ்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் துரையரசன்(45). இவர் நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் தனது பைக்கினை நிறுத்தி இருந்தார். இதன் பின்னர் பள்ளியில் வேலையை முடித்து விட்டு வீடு திரும்புவதற்காக பைக்கை எடுக்க முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிள் முன்புறத்தில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவினாசியை சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான விஜய் மற்றும் கவுதம் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இருவரும் பைக்கில் பதுங்கி இருந்த 4 அடி நீள நல்லபாம்பை லாவகமாக பிடித்து சென்றனர்.

Related Stories: