பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு காங்கிரஸ் மவுன போராட்டம்

ஈரோடு, மே 20: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வாயில் வெள்ளை துணியை கட்டி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாயில் வெள்ளை துணியை கட்டி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் முன்னிலை வகித்தார். இதில், ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாசலம், மண்டல தலைவர்கள் ஜாபர்சாதிக், திருச்செல்வம், விஜயபாஸ்கர், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன், குப்பண்ணா சந்துரு, சேவா தள தலைவர் முகமது யூசுப், சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பாஷா, அர்சத், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கல்கி, பிரவீன்குமார், கேசவன், இப்ராகிம், சரவணன், தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெருந்துறை பஸ் ஸ்டாண்ட் அருகே மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மவுன போராட்டம் நடைபெற்றது.

கோபி: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து டி.என்.பாளையம் அண்ணா சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி மவுன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறையில் இருந்த ேபரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் விடுதலை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தார். அதன் ஒரு பகுதியாக, கோபி அருகே டி.என்.பாளையம் அண்ணா சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் வட்டார தலைவர் பழனிச்சாமி, காசிபாளையம் பேரூராட்சி கவுன்சிலர் கோதாண்டன், பிரபாகரன் உள்ளிட்ட பலர்  வாயில் வெள்ளை துணி கட்டி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: