×

இந்திய விமானப்படையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு,  மே 20: இந்திய விமானப்படையில் சேர விரும்புபவர்களுக்கான இணையவழி பதிவு செய்ய உள்ளதாக செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. இந்திய விமானப்படையில் சேரவிரும்பும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தாம்பரம், இந்திய விமானப்படை தேர்வு மையத்தில் இந்திய விமானப்படை ஆள் சேர்ப்பு தேர்வுகளுக்கான பதிவு செய்தல் Google Form Link மூலம் பெறப்பட்டுள்ளது. (Google Form Link - http://surl.li/bzfav) இதற்கான கல்வித்தகுதி SSLC, HSC தேர்வில் 50% சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.  வயது வரம்பு  17 முதல் 21 வரை. தகுதியுயவர்கள் இந்திய விமானப்படையில் இணைய விருப்பமுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பெருமளவில் இந்த இணைப்பில் தங்களது விருப்பத்தை பதிவு செய்து பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Indian Air Force ,
× RELATED அக்னிபாத் திட்டத்தில் இந்திய...