திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் நடந்து வரும் திட்டப்பணிகளை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மார்க்கெட் பகுதியில் உள்ள உழவர் சந்தை, வடக்குபட்டு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி, கிரிவலப்பாதை அருகில் நடக்கும் திருவடி பூங்கா பணி, தேசுமுகிப்பேட்டையில் கழிவுநீர் செல்லும் கால்வாய் பணி ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் ஜி.டி.யுவராஜ், திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, துணை சேர்மன் எஸ்.ஏ.பச்சையப்பன், பேரூராட்சி துணை தலைவர் வீ.அருள்மணி, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பழனி, சத்தியமூர்த்தி, தமிழரசு, திமுக மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பரந்தாமன், துணை அமைப்பாளர் தினேஷ், நிர்வாகிகள் இளங்கோ, அகமதுபாஷா, தனசேகர், விஜயன், வேதகிரி, செங்குட்டுவன் உள்பட பலர் இருந்தனர்.

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் ஒன்றியம் அழகு  சமுத்திரம் ஊராட்சி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மேலேரி ஏரிக்கு வரத்து கால்வாய் அமைக்கும் பணியை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு  செய்தார். பின்னர், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், புதிதாக கட்டப்படும் ஊராட்சி மன்ற கட்டடித்தை பார்வையிட்டார். அப்போது திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி உள்பட பலர் இருந்தனர்.

தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் சிறப்பு நிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்டம் மூலம் குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் பணி, பேரூராட்சியில்,  புதியதாக அமைக்கப்படும் பூங்கா, ஏற்கனவே உள்ள  உழவர் சந்தை ஆகியவற்றை ஆய்வு  செய்தார்.

Related Stories: