கே.பி.ஆர். கல்லூரியில் வேலைவாய்ப்பு பணி நியமன ஆணை வழங்கும் விழா

சோமனூர்,மே19: சோமனூர் அடுத்த கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியில்  நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவ,மாணவிகளுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

முன்னதாக கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வரவேற்றார். கல்லூரியின் நிறுவனர் ராமசாமி தலைமை தாங்கி பேசினார். கல்லூரியின் ஆலோசகர் ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் ஒடிசா மாநில தன்னம்பிக்கை பேச்சாளர் இத்திராணிசமந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர், மாணவர்கள் பணியிடத்தில் செயலாற்ற வேண்டிய முறைகள் குறித்தும், வெற்றியாளராக உருவாவதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மாணவர்கள் பணியில் சிறந்து விளங்க செயலாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த கல்வியாண்டில் 98 சதவீத மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர். மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினர். முடிவில் கல்லூரியின் வேலை வாய்ப்பு பயிற்சியாளர் கீர்த்திகா தேவி நன்றியுரை வழங்கினார்.

Related Stories: