×

தேரியூரில் பெண்களுக்கு இலவச ஆடுகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

உடன்குடி, மே 19: உடன்குடி யூனியன் செட்டியாபத்து பஞ்சாயத்து தேரியூரில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச ஆடுகள் வழங்கும் விழா நடந்தது. பஞ். தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார்.   யூனியன் சேர்மன் பாலசிங், பேரூராட்சி துணை தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 ஆடுகளை வழங்கி அரசின் சாதனைகள் குறித்து பேசினார். இதில்  மாவட்ட அமைப்பாளர்கள் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு ராஜேஷ்,  இளைஞரணி ராமஜெயம்,  நெசவாளர் அணி மகாவிஷ்ணு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் வர்த்தக அணி  ரவிராஜா, இளங்கோ, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு ஷேக்முகமது, சிராசூதின், மாணவரணி ராஜாபிரபு, அலாவுதீன்,  இளைஞரணி மணப்பாடு ஜெயப்பிரகாஷ்,  உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரதீப் கண்ணன்,  அஸ்ஸாப்அலி பாதுஷா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய்,  தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், குலசை பஞ். துணை தலைவர் கணேசன், எள்ளுவிளை கிளை செயலாளர் மோகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Anita Radhakrishnan ,Theriyur ,
× RELATED பாஜக நிர்வாகிகளை விரட்டியடித்த குளச்சல் மீனவர்கள்