டிஎஸ்பி அலுவலக டிரைவர் தற்கொலை

மேட்டுப்பாளையம், மே 19: தூத்துக்குடி மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் தாமோதரன் (41). தற்போது மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அலுவலகத்தில் வாகன டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்ற அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த சிறுமுகை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: