எப்.எக்ஸ். கல்லூரியில் ரத்ததான முகாம்

நெல்லை, மே 19:  நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடந்த முகாமில் மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ரத்ததான முகாம் நடத்தியது. இம்முகாமில் கல்லூரியின் அனைத்து துறையைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.

நிகழ்வில் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர் புனிதா ரஞ்சிதம் மற்றும் ரத்த வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டு, மாணவர்களிடம் ரத்ததானம் செய்வதன் அவசியத்தை விளக்கினர். இந்த முகாம் ஸ்காட் கல்வி குழுமங்களின் நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார் ஆகியோரின் அறிவுரையின்படியும், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் சகாரியா காபிரியல், நாட்டு நலத்திட்ட அலுவலர் சுமன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: