ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கல்

நெல்லை, மே 19:  திசையன்விளை கீழநந்தன்குளம் செல்லத்துரை வாதிரியார் - சீதாலெச்சுமி அம்மாள்  நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாளை. வழக்கறிஞர் சந்தனகுமார் அவரது குடும்பத்தினர், நெல்லையில் உள்ள முதியோர் இல்லம், பார்வையற்றோர் காப்பகம், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் காப்பகம், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீதியோரத்தில் வசிப்போருக்கும் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர் மணிகண்டன், ஜெயசீலன், பால் மேத்யூ, அருள், பஷீர்,  மற்றும் சிஎஸ்கே நண்பர்கள் குழுவினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: