விபத்தில் பலியான காவலர் குடும்பத்திற்கு ₹52 லட்சம் இழப்பீடு

திருவில்லிபுத்தூர், மே 19: மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (32). இவர் இரண்டாம் நிலை காவலராக தேனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 2016 ம் ஆண்டு ஏப்.26 ம் தேதி மதுரையில் பாதுகாப்பு பணிக்கு வந்துவிட்டு மீண்டும் தேனிக்கு தனது டூவீலரில் சென்றுள்ளார். அப்போது உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகம் அருகே செல்லும் போது பின்னால் வந்த தனியாருக்குச் சொந்தமான வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து ராஜேந்திரன் மனைவி பாப்பாத்தி சார்பில் திருவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ரூ. 73 லட்சம் நஷ்டஈடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி செல்வன் சேசு ராஜா விபத்தில் பலியான போலீஸ்காரர் ராஜேஸ்வரன் குடும்பத்திற்கு ரூ.52 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் இன்சுரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவிட்டார்.

Related Stories: