காஸ் பாயின்ட் நிறுவனத்தின் எல்பிஜி டீலராக விண்ணப்பிக்கலாம்

சென்னை: காஸ் பாயின்ட் பெட்ரோலியம் இந்தியா நிறுவனம், தமிழத்தில் வர்த்தக பயன்பாட்டுக்கான எல்பிஜி காஸ் சிலிண்டர்களை ஓட்டல், ரெஸ்டாரன்ட்களுக்கு விநியோகிக்க விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.

 இதுதொடர்பாக அந்நிறுவனம் வௌியிட்ட அறிக்கையில், `தமிழகத்தில் காஸ் பாயின்ட் எல்பிஜி விநியோகஸ்தர், டீலராக பாதுகாப்பு டெபாசிட் தேவையில்லை. முதலீடு செய்து, நிறுவன வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தால் 10 முதல் 12 மாதங்களில் முதலீடு செய்த தொகையை ஈட்டிவிடலாம். 20 முதல் 25 சதவீதம் அளவுக்கு லாபம் கிடைக்கும். டீலர், விநியோகஸ்தராக நியமிக்கப்படுவோருக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கு சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலை விகேஎம் ஸ்கொயரில் உள்ள தங்கள் நிறுவன முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்’ என தெரிவித்திருந்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: