பிளஸ் 1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: ஆலந்தூர் மடுவின்கரை 1வது தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரின் மகன் விஷ்வா(17). அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்தான். நேற்று முன் தினம் மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய விஷ்வா, குளிக்க செல்வதாக கூறிவிட்டு பாத்ரூமுக்கு சென்றுள்ளார். வெகு நேரமாக வெளியே வரவில்லை. பெற்றோர் கதவை உடைத்து பார்த்தனர். உள்ளே விஷ்வா தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த  பரங்கிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவனின் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், ‘நேற்று முன்தினம் மாலை மாணவர்களுடன் சிரித்து விளையாடும்போது விஷ்வா, ‘நான் செத்தா நீங்க என்னடா பண்ணுவீங்க’ என்று கேட்டபோது ‘நாங்க நன்றாக டான்ஸ் ஆடுவோம்’ என்று நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

Related Stories: