மனவளர்ச்சி குன்றிய குழந்தை மீது தாக்குதல்? பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் புகார்

பெரம்பூர்: வியாசர்பாடி தாமோதரன் தெரு பகுதியை சேர்ந்தவர் திவ்யா(27), பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். இவரது 6 வயது மகள் பிறந்தது முதலே சற்று மனவளர்ச்சி சரியில்லாமல் இருந்தாள். அவளை பெரம்பூரில் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் கடந்த 4ம் தேதி சேர்த்துள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் குழந்தையின் தாத்தா கலைச்செல்வன் குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு மதியம் 12 மணிக்கு குழந்தையை அழைத்துச் செல்ல வந்தார். அப்போது பள்ளி ஆசிரியர் கவிதா, `குழந்தைக்கு வலது கணுக்கால் மற்றும் இடது கணுக்கால் ஆகிய இடங்களில் காயம் உள்ளது. எதற்காக காயம் உள்ள குழந்தையை பள்ளிக்கு அனுப்புகிறீர்கள்’ என கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் தனது மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். திவ்யா பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். புகாரின்பேரில் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: