மளிகை கடையை உடைத்து திருட்டு

ஆவடி: ஆவடி நந்தவனம் மேட்டூர் சாலை மற்றும் கன்னிகாபுரம் சாலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல்  கடைகளை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.   தரணி குமார் (45) என்பவரின் மொபைல் கடையையும் கன்னிகாபுரம் பகுதியில் ஆன்டனி (37) என்பவரின் ஸ்டுடியோ கடையின் பூட்டைஉடைக்க முயற்சி செய்துள்ளனர்.

அதே பகுதியில் உள்ள அன்பு ஸ்டோர் லட்சுமி (42) என்பவரின் மளிகை கடையில் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். பூட்டை உடைக்க முடியவில்லை.  நந்தவன மேட்டூர் ராஜன் (65) மளிகை கடையை உடைத்து ரூ.2000 திருடியுள்ளனர். இதுகுறித்து ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடுகின்றனர்.

Related Stories: