வாலிபரை கல்லால் தாக்கியவர் கைது

ஆவடி: அன்னனூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் முத்து (35). இரும்பி வியாபாரி. இவர் நேற்றுமுன்தினம் இரவு உறவினர் மோரை பகுதியை சேர்ந்த விக்கி (19) உடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது விக்கியின் தங்கையை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி முத்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. விக்கி, முத்துவின் தலையில் கல்லை வைத்து தாக்கி உள்ளார். இதில் முத்து பலத்த காயமடைந்தார். முத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.   ஆவடி போலீசார்  விக்கி மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: