அரசாங்க உத்தரவுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை வழங்கியவர் மீது வழக்கு பதிவு

திருவள்ளூர்: அரசாங்க உத்தரவுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை வழங்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவள்ளூரை அடுத்த பூண்டி பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவர் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்ற அரசாங்க உத்தரவுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை வழங்கி கொண்டிருந்தார்.

அவர் வன்முறையை தூண்டி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் நகர கிராம நிர்வாக அலுவலர் பிரதீப் நகர போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: