தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய  அலுவலகத்தில்  கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையத்தில்,தேனீ வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.  வேளாண் உதவி இயக்குனர் அன்புச்செல்வி தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் முகுந்தன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராயப்பன், உதவி மேலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண் அலுவலர் ஆனந்தராஜ் வரவேற்றார். தேனீ வளர்ப்பு சிறப்பு பயிற்சியாளர் டாக்டர் வில்லியம்ஸ் கலந்து கொண்டு, கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் 40 விவசாயிகள் தேர்வு செய்து, அவர்களுக்கு, தொழில்நுட்ப முறையில் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்தார். இதில்,  கிராமங்களில் எளிமையான முறையில் தேனீ வளர்க்கும் வழிமுறைகள், வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள், விவசாயிகளுக்கான லாபம் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories: