வாகன விபத்தில் தொழிலாளி பலி

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம், யாதவர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (33).  கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை ரமேஷ், வேலை விஷயமாக தாம்பரம் சென்றார். வேலை முடிந்து இரவு 11 மணிக்கு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூர் தனியார் கல்லூரி அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. தூக்கி வீசப்பட்ட ரமேஷ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே  இறந்தார். புகாரின்படி  குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: