மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அதிகாரி ஆய்வு

மாமல்லபுரம்: உலக நாடுகள் பங்கேற்க இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில், வரும் ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், 200 நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், போட்டி நடைபெறும் இடத்துக்கான சிறப்பு அலுவலர் சங்கர் தலைமையில், வருவாய், பொதுப்பணி, மின்சாரம், நகராட்சி, குடிநீர் வழங்கல் உள்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. அப்போது, புதிதாக மின்மாற்றி அமைப்பது, இரவை பகலாக்கும் வகையில் அதிகம் வெளிச்சம் கொண்ட எல்இடி விளக்குகள் பொருத்துவது, பழைய அரங்கில் உள்ள மின் விளக்குகளை அகற்றி புதிதாக மாற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, செங்கல்பட்டு சப் கலெக்டர் சஜ்ஜீவனா, முதன்மை அலுவலர் மற்றும் ஒலிம்பியாட் கமிட்டி செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: