வாகனம் மோதி செக்யூரிட்டி பலி

திருத்தணி: சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(44), தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி பணியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகேந்திரன் சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு பொதுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர்.

Related Stories: