ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.59 லட்சம் மோசடி: ஆசாமி கைது

ஆவடி: ஆவடி அடுத்த திருமலைவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(38), பி.இ படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றிவந்துள்ளார். இந்நிலையில், இவரிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்(40) கூறியுள்ளார். இதனை நம்பி அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.13 லட்சம் தங்கராஜ் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தார். மேலும் இதேபோல் சென்னையை சேர்ந்த ஸ்ரீநாத், கார்த்திக்குமார் மற்றும் திருமல்லேஷ் ஆகியோரிடமும் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.59 லட்சத்து 37 ஆயிரம் பெற்றுக்கொண்டு இதுநாள்வரை வேலை வாங்கி தராமல் சுரேஷ் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட வாலிபர்கள் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருமுல்லைவாயல் போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியில் தலைமறைவாக இருந்த சுரேஷை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: