தேசிய சதுரங்க போட்டியில் இளம் வயதில் பெருமை சேர்த்த வேலம்மாள் பள்ளி மாணவி

திருவள்ளூர்: முகப்பேர் வேலம்மாள் முதன்மை பள்ளியில் 3ம் வகுப்பு பயிலும் மாணவி பூஜாஸ்ரீ 34வது தேசிய சதுரங்க போட்டியில் 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். மேலும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கே.எல்.பல்கலை கழகத்தில் நடைபெற்ற போட்டியில் நுட்பமாக விளையாடி ரூ.36 ஆயிரம் பரிசுத்தொகை வென்றார். தேசிய சாம்பியன்ஷிப்பில் போடியில் பினிஷுடன் விளையாடி 11க்கு 9 மதிப்பெண்களுடன் 2வது இடத்தை பெற்றார். மேலும் 8 வயது உடையவர்களுக்கான உலக இளைஞர் மற்றும் ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் 2022ல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த பூஜாஸ்ரீ தகுதி பெற்றுள்ளார். பைடின் கீழ் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஆசாதி கா அம்ருத் மஹோத்சவின் ஒரு பகுதியாக ஆறு நாள் தேசிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா முழுவதும் 8 வயதுக்குட்பட்ட செஸ் சாம்பியன்கள் பங்கேற்றனர். இதில் பூஜாஸ்ரீ பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தொடர் வெற்றிக்கு பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் முதல்வர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: