திருத்தணி அருகே பண்ணை வீட்டில் பொருட்கள் திருட்டு

திருத்தணி: திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே ரங்காபுரம் கிராமத்தில் சென்னையை சேர்ந்த சாந்தி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மா உள்ளிட்ட தோட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் ஒரு சிறிய பண்ணை வீடும் கட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டில் காஞ்சிபாடி கிராமத்தை சேர்ந்த ரகுபதி(30) என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பண்ணை வீட்டுக்கு சென்ற ரகுபதி வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது எல்இடி டிவி, இன்வெர்ட்டர் பேட்டரி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திடுபோன பொருட்களின் மதிப்பு ரூ.20 ஆயிரம்.

இதுகுறித்து கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் ரகுபதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: