ரயிலில் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: கடத்தல்காரர்களுக்கு போலீஸ் வலை

திருவள்ளூர்: திருவள்ளூரில் ரயில் மூலம் கடத்த முயன்ற 400 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து தலைமறைவான கடத்தல்காரர்களை வலைவீசி தேடிவருகின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், நேற்று ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் தலைமையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ரயில்வே பாதுகாப்பு பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நடைமேடையில் பதுக்கி வைத்து ரயில் மூலம் கடத்தி கொண்டு செல்ல வைத்திருந்த 400 கிலோ எடை கொண்ட 17 மூட்டை ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைப்பற்றினர். ஆனால் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இதை கடத்திய நபர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர். மேலும் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.

Related Stories: