அரிசி அரவைக்கு விருப்பமுள்ள முகவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

திருவள்ளூர்: அரிசி அரவைக்கு விருப்பமுள்ள முகவர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் சேகரிப்பது முதல் கழக கிடங்குகளில் அரிசியை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் கழக அரவை முகவர்கள் மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்துள்ளது. எனவே, இதில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருவள்ளூர் மண்டலம், 46, வள்ளலார் தெரு, பெரியகுப்பம், மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளர் அலுவலக கைபேசி எண் 9444662984ல் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: